
கர்ப்ப காலமானது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக அழகான கட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் நிறைய மாற்றங்கள் நிகழும். நீங்கள் பிரசவத்திற்கு முன்னும் பின்னும் இந்த மாற்றங்களை எல்லாம் அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும். உங்களுடைய உடலில் நீங்கள் பார்க்கும் பெரும்பாலான மாற்றங்கள் எல்லாம் ஹார்மோன் செயல்பாடுகளால் விளைகின்றன. தைராய்டு சுரப்பி உங்கள் உடலில் உள்ள ஹார்மோன் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் முக்கிய சுரப்பிகளில் ஒன்றாகும். தைராய்டு சுரப்பி தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது, இது உங்கள் கழுத்தின் முன்புறத்தில் ஒரு சிறிய பட்டாம்பூச்சி போன்ற வடிவத்தில் இருக்கும். உங்களுடைய உடல் எவ்வாறு ஆற்றலைப் பயன்படுத்துகிறது என்பதை தைராய்டு ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகிறது. மேலும், இது உங்களுடைய இதயத் துடிப்பு விகிதம் உட்பட உங்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. உங்களுடைய குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் இயல்பான வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன்கள் அவசியம். எனவே, கர்ப்ப காலத்தில் உங்களுடைய தைராய்டு ஆரோக்கியத்தை நீங்கள் கண்காணிக்க வேண்டும் மற்றும் கர்ப்ப காலத்தில் தைராய்டு அளவை எப்பொழுதெல்லாம் சரிபார்க்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
சில பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் தைராய்டு அதிகமாகத் தூண்டப்படுகிறது. இது தைராய்டு ஹார்மோன் செறிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அதிகரிக்கும் இந்த நிலையானது ஹைப்பர் தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. அதே போல் சில பெண்களில், கர்ப்ப காலத்தில் தைராய்டு சுரப்பி குறைவாகத் தூண்டப்படுகிறது. இது தைராய்டு ஹார்மோன் செறிவுகளையும் மாற்றுகிறது. இங்குள்ள வித்தியாசம் என்னவென்றால், தைராய்டு ஹார்மோன் செறிவு குறைகிறது. தைராய்டு செயல்பாடு குறையும் இந்த நிலை ஹைப்போ தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் இந்த இரண்டும் சாதகமற்ற நிலைகள் ஆகும். எனவே, இந்த இரண்டு நிலைமைகளையும் நீங்கள் புரிந்துகொள்வது முக்கியம். மேலும், உங்களுடைய தைராய்டு செயல்பாட்டை சரியான இடைவெளியில் கண்காணிக்க வேண்டும். எனவே, கர்ப்ப காலத்திலும் அதற்குப் பின்னரும் உங்களையும் உங்கள் குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி என்பதை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக கர்ப்பிணிகளுக்கு ஹைப்பர் தைராய்டிசத்தை விட ஹைப்போதைராய்டிசம் தான் அதிகமாக காணப்படுகிறது (2.5%). இதனால் புதிதாகப் பிறந்த குழந்தைகள் சார்ந்த அறிவாற்றல் குறைபாடுகள் மற்றும் மகப்பேறியல் பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம். கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் ஹைப்போ தைராய்டிசத்தில், கடுமையான சோர்வு, குளிர் நிலைகளை சமாளிக்க இயலாமை, தசைப்பிடிப்பு, மலச்சிக்கலின் கடுமையான நிகழ்வுகள் மற்றும் நினைவாற்றல் மற்றும் விஷயங்களில் கவனம் செலுத்தும் திறனில் இருக்கும் சிரமங்கள் போன்றவை வெளிப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், ஹைப்போ தைராய்டிசம் லேசானதாக இருக்கும் மற்றும் கர்ப்ப காலத்தில் வெளிப்புற அறிகுறிகள் எதையும் காட்டாது. அஷிமோட்டோவின் கேடயச் சுரப்பியழற்சி(Hashimoto's thyroiditis) அல்லது நாள்பட்ட நிணநீர்ச் சுரப்பியழற்சி அல்லது அஷிமோட்டோ நோய் எனப்படும் ஒரு தன்னுடல் தாக்கு நோயாகும். கர்ப்ப காலத்தில் ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுவதற்கான பெரும்பாலான காரணத்தில் இது ஒன்றாகும். மேலும், நூறு கர்ப்பிணிப் பெண்களில் 2 அல்லது 3 பேர் இதனால் பாதிக்கப்படலாம். உங்களுக்கு அஷிமோட்டோ நோய் இருந்தால், உங்களுடைய நோயெதிர்ப்பு அமைப்பு தைராய்டை தாக்குகிறது, இது தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் தைராய்டின் திறனைக் குறைக்கிறது இதன் விளைவாக வீக்கம் மற்றும் சேதம் ஏற்படுகிறது. ஹைப்போ தைராய்டிசத்திற்கு சிகிச்சையளிக்காவிட்டால் இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தலாம்:
பிரசவத்தின் போது அல்லது உங்கள் கர்ப்பத்தின் இருபத்தி நான்கு வாரங்களுக்குப் பிறகு உங்கள் குழந்தை இறக்கக்கூடும்.
உங்களுடைய கர்ப்பத்தின் 20 வது வாரத்திற்கு முன்பே உங்கள் கருவை நீங்கள் இழக்க நேரிடலாம்.
இரத்த சோகை என்பது உங்களுடைய இரத்தத்தில் இருக்கும் ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களின் குறைபாடு உள்ள ஒரு நிலையாகும். இந்த செல்கள் உங்களுடைய உடலின் அனைத்து பாகங்களையும் சென்றடைவதற்கு ஆக்ஸிஜன் அவசியம்.
இது இதய செயலிழப்பு நிலை எனப்படுகிறது, இதில் உங்கள் இதயம் உந்தி சக்தியை (பம்பிங்) இழக்கிறது. இதன் விளைவாக உங்களுடைய உடலில் திரவம் உருவாகிறது. இருந்தாலும், இந்த நிலை அரிதானது.
உங்கள் குழந்தை பிறக்கும் போது போதுமான எடை இல்லாமல் இருக்கலாம், இதற்காக கூடுதல் ஆதரவு மற்றும் துணைக்கருவிகள் தேவைப்படலாம்.
இது ஒரு ஆபத்தான நிலையாகும், இதனால் உங்களுடைய கர்ப்பத்திற்குப் பிறகு உங்களுடைய இரத்த அழுத்தம் ஆரோக்கியமற்ற நிலைக்கு உயரலாம்.
உங்களுடைய குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும் மூளைக்கும் தைராய்டு ஹார்மோன்கள் மிகவும் முக்கியமானவை. மேலும், சிகிச்சை அளிக்கப்படாத ஹைப்போ தைராய்டிசத்தால், குறிப்பாக முதல் மூன்று மாதங்களில், குறைந்த ஐ.க்யூ மற்றும் வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
கர்ப்ப காலத்தில் ஹைப்பர் தைராய்டிசம் என்பது பொதுவானது கிடையாது. சாதாரண கர்ப்ப காலத்தில், சோர்வு, வேகமான இதயத் துடிப்பு மற்றும் வெப்பத்தை சரிசெய்வதில் சிரமம் போன்றவை இருந்தால் இது ஹைப்பர் தைராய்டிசத்தின் சில அறிகுறிகளாகும். நீங்கள் கவனிக்க வேண்டிய ஹைப்பர் தைராய்டிசத்தின் வேறு சில அறிகுறிகள்: உங்கள் இதயத் துடிப்பில் உள்ள அசாதாரணங்கள், உங்கள் கைகளில் நடுக்கம் அல்லது உதறல், விவரிக்க முடியாத எடை இழப்பு அல்லது சாதாரணமாக கர்ப்பத்தின் எடை அதிகரிப்பை அனுபவிக்காதது போன்றவை இதன் வேறு சில அறிகுறிகளாகும். கர்ப்ப காலத்தில் ஹைப்பர் தைராய்டிசம் ஏற்படுவ்தற்கு கிரேவ்ஸ் நோய் மிகவும் பொதுவான காரணமாக இருக்கும். கிரேவ்ஸ் நோய் என்பது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது, இந்த நிலை காரணமாக தைராய்டு அதிக தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. சிகிச்சையளிக்கப்படாத ஹைப்பர் தைராய்டிசம் பின்வரும் சூழ்நிலைகள் அல்லது நிலைமைகளுக்கு வழிவகுக்கும்:
கருச்சிதைவு
குறைப்பிரசவம்: உங்களுடைய இயல்பான கர்ப்ப காலம் முடிவதற்கு முன்பு, குழந்தை முழுமையான அல்லது தேவையான வளர்ச்சியை அடைவதற்கு முன்பே உங்களுடைய குழந்தை பிறக்கலாம்.
குழந்தை பிறக்கும்போது குறைவான எடை இருத்தல்
இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல்
இதய செயலிழப்பு
பிறக்கும் குழந்தைக்கும் ஹைப்பர்தைராய்டிசம்: இந்த நிலைக்கு காரணமான ஆன்டிபாடி உங்கள் குழந்தையின் இரத்த ஓட்டத்தில் கலந்து உங்கள் குழந்தைக்கு ஹைப்பர் தைராய்டிசத்திற்கு வழிவகுக்கும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் டபுள் மார்க்கர் டெஸ்ட்: இது ஏன் தேவைப்படுகிறது & எப்போது செய்துகொள்ள வேண்டும்
இறுதியாக, கர்ப்ப காலம் முழுவதுமே உங்கள் தைராய்டு அளவை கண்காணிக்க வேண்டும். உங்கள் நிலையைப் பொறுத்து, இதனுடைய அடுக்கு நிகழ்வு மாறுகிறது. உங்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் இருந்தால், கர்ப்ப காலத்தில் நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு ஒருமுறை தைராய்டு இரத்த பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். உங்களுக்கு ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால், ஒவ்வொரு நான்கு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது உங்கள் உட்சுரப்பியல் நிபுணர் அறிவுறுத்தும் நாட்களில் தவறாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கர்ப்பத்திற்குப் பிறகு தைராய்டு அளவை எப்போது சரிபார்க்க வேண்டும் மற்றும் கர்ப்ப காலத்தில் தைராய்டு அளவை எத்தனை முறை அடிக்கடி சரிபார்க்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இந்தக் கட்டுரையின் தகவல் உங்களுக்கு உதவியிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.




This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |